const keyword in Javascript
const keyword ஆனது javascript இல் ஒரு variable ஐ declare செய்வதற்கு பயன்படுகிறது.
const keyword பயன்படுத்தி ஒரு variable declare செய்யும் போது அதற்கான value initialize கண்டிப்பாக initialize செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உதராணமாக const data = 10; இங்கு const என்பது keyword மற்றும் data என்பது variable name இங்கு data என்ற variable க்கு 10 என்ற value initialize செய்யப்பட்டுள்ளது.
const keyword பயன்படுத்தி ஒரு variable ஐ அதாவது ஒரு variable name ஐ redeclare செய்யமுடியாது. இங்கு ஒரு variable name ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
const keyword ஆனது scope specific ஆக செயல்படுகிறது. இங்கு ஒரு variable ஆனது scope க்கு வெளியில் ஒரு variable ஆகவும் மற்றும் scope க்கு உள்ளே ஒரு variable ஆகவும் செயல்படுகிறது.
const keyword பயன்படுத்தி ஒரு scope இன் உள்ளே ஒரு variable காண value ஐ reinitialize செய்ய முடியாது.
const keyword பயன்படுத்தி scope களில் redeclare செய்யும் போது அனைத்து variable ம் தனிதனியாக எடுத்துகொள்ளபடும்.
const keyword in Javascript object
const keyword பயன்படுத்தி ஒரு object declare செய்யும் போது அதற்கான value கண்டிப்பாக initialize செய்ய வேண்டும். const keyword பயன்படுத்தி ஒரு object ஐ அதாவது ஒரு variable name ஐ redeclare செய்ய முடியாது.const keyword ஆனது scope specific ஆக செயல்படுகிறது.const keyword பயன்படுத்தி ஒரு object declare செய்யும் போது இங்கு variable ஆனது scope க்கு வெளியில் ஒரு object ஆகவும் மற்றும் scope க்கு உள்ளே ஒரு object ஆகவும் செயல்படுகிறது.
Example1
<script>
const input = 10;
function test() {
const input = 20;
document.writeln(input);
}
test();
document.writeln(input);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் const keyword ஒரு scope specific ஆக செயல்படுகிறது. இங்கு input என்ற variable function க்கு வெளியே ஒரு variable ஆகவும் function க்கு உள்ளே ஒரு variable ஆகவும் செயல்படும். எனவே இங்கு function உள்ளே input variable value 20 எனவும் function வெளியே input variable value 10 எனவும் இருக்கும்.
20 10
Example2
<script>
const obj = {
name:"parallel codes"
};
function test() {
const obj = {
name:"Linto.in"
};
document.writeln(obj.name);
}
test();
document.writeln(obj.name);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு const keyword ஒரு function scope specific ஆக செயல்படுகிறது. இங்கு obj என்ற variable function க்கு வெளியே ஒரு object ஆகவும் function க்கு உள்ளே ஒரு object ஆகவும் செயல்படும். எனவே இங்கு function உள்ளே obj.name variable value Linto.in எனவும் function வெளியே obj.name variable value parallel codes எனவும் இருக்கும்.
Linto.in parallel codes
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments