JavaScript Functions
Javascript function ஆனது ஒரு குறிப்பிட்ட operation ஐ perform செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு javascript function ஆனது code ஐ reuse செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு function ஐ call செய்வதன் மூலம் code ஐ reuse செய்து கொள்ளலாம்.
function functionName([arg1, arg2, ...argN]){ //code to be executed }
Example1
<script>
function message(){
document.writeln("This is a Function");
}
message();
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு message என்ற function name கொண்ட ஒரு function ஆனது உள்ளது. இந்த function உள்ளே document.writeln("This is a Function") என்ற statement ஆனது உள்ளது. இந்த statement "This is a Function" என்ற string ஐ print செய்யும் வேலையை செய்கிறது. இங்கு முக்கியமாக message என்ற function ஐ call செய்த பிறகு மட்டுமே function இன் உள்ளே அமைந்திருக்கும் code ஆனது execute ஆகும். எனவே message(); என்ற முறையில் function ஐ call செய்யலாம் இங்கு output This is a Function என கிடைக்கிறது.
This is a Function
Example2
<script>
function return_message(){
return "This is return from function";
}
var data = return_message();
document.writeln(data);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு return_message என்ற function name கொண்ட ஒரு function ஆனது உள்ளது. இந்த function உள்ளே return "This is return from function" என்ற statement ஆனது உள்ளது. இந்த statement "This is return from function" என்ற string ஐ return செய்யும் வேலையை செய்கிறது. இங்கு முக்கியமாக message என்ற function ஐ call செய்யும் போது return என்ற keyword உள்ளதால் return செய்த string function ஐ call செய்த இடத்திற்கு வந்து store ஆகிவிடும் பிறது இந்த function call செய்யப்பட்ட இடத்தை print செய்து பார்க்கும் போது "This is return from function" என்ற string output ஆக கிடைக்கிறது.
"This is return from function"
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments