split() Function in Javascript
split() function இங்கு string ஐ ஒரு குறிப்பிட்ட seperator ஐ பயன்படுத்தி தனித்தனி string ஆக பிரித்து ஒரு புதிய array இல் store செய்கிறது.
string.split(separator, limit)
Example1
<script>
var input = "Education is the most powerful weapon which you can use to change the world";
var res = input.split(" ",6);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "Education is the most powerful weapon which you can use to change the world" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.split(" ",6) என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு string seperator space மற்றும் அதன் limit 6 என கொடுகப்பட்டுள்ளது. எனவே இங்கு split() function space என்ற seperator ஐ பயன்படுத்தி தனித்தனி string ஆக பிரித்து ஒரு array இல் store செய்கிறது. எனவே output Education,is,the,most,powerful,weapon என்ற ஒரு array வாக கிடைக்கிறது.
Education,is,the,most,powerful,weapon
Example2
<script>
var data = "If you want to lift yourself up, lift up someone else";
var res = data.split(" ");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "If you want to lift yourself up, lift up someone else" என்ற string store செய்யப்பட்டுள்ளது. இங்கு data.split(" ") என்ற function பயன்படுத்துகிறோம். இங்கு limit values எதுவும் அனுப்பவில்லை. இங்கு split() என்ற function ஆனது space seperator ஐ பயன்படுத்தி தனித்தனி string ஆக பிரித்து ஒரு array இல் store செய்கிறது.output ஐ கவனிக்கவும்.
If,you,want,to,lift,yourself,up,,lift,up,someone,else
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments