findIndex() Function in Javascript

findIndex() function இங்கு ஒரு array இல் முதலில் எந்த element நாம் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட condition ஐ satisfy செய்கிறதோ அந்த element இன் index ஐ கண்டறிய findIndex() function பயன்படுகிறது. இந்த function original array இல் எந்தவித மாற்றமும் செய்யாது.

array.findIndex(callback(value,index,arr),thisArg)

Note: findIndex() function இங்கு இரண்டு values argument ஆக அனுபப்படுகிறது. அவைகள் முறையே ஒரு callback மற்றும் thisArg ஆகியன. இங்கு இந்த callback function இல் currentvalue,index மற்றும் array ஆகியன parameter களாக கிடைக்கும். இங்கு முக்கியமாக array உள்ள elements கள் முதலில் எந்த element நாம் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட condition ஐ satisfy செய்கிறதோ அந்த element இன் index output ஆக கிடைக்கும். இங்கு எந்த condition ம் satisfy ஆகவில்லை என்றால் -1 என return செய்யும்.

Example1

<script>
var data = [5,10,20,30,40];
var res = data.findIndex(function(val){
   return val>20;
});
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் [5,10,20,30,40] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு data.findIndex(function(val)) function ஐ பயன்படுத்துகிறோம், findIndex() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் data என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது. இங்கு வரும் values கள் முதலில் எந்த value function உள்ளே இருக்கும் ஒரு condition ஐ satisfy பண்ணும் பட்சத்தில் அந்த value இன் index மட்டும் output ஆக கிடைக்கும். இங்கு val>20 அதாவது condition 20 க்கு அதிகமாக இருக்கும் element இல் முதலில் satisfy ஆகும் value இன் index 3 என்பது நமக்கு output இல் கிடைக்கும்.

Output:

3

Example2

<script>
var input = [25,50,75,100,125,150,175,200];
var res = input.findIndex(function(val){
   return val>200;
});
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் [25,50,75,100,125,150,175,200] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு input.findIndex(function(val)) function ஐ பயன்படுத்துகிறோம், findIndex() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் input என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது. இங்கு வரும் values கள் முதலில் எந்த value function உள்ளே இருக்கும் ஒரு condition ஐ satisfy பண்ணும் பட்சத்தில் அந்த element இன் index மட்டும் output ஆக கிடைக்கும். இங்கு val>200 அதாவது condition 200 க்கு அதிகமாக எந்த ஒரு element ம் condition satisfy செய்யாது எனவே index value -1 என output இல் கிடைக்கும்.

Output:

-1

Comments