every() Function in Javascript

every() function ஒரு array இல் உள்ள அனைத்து elements களும் ஒரு குறிப்பிட்ட condition ஐ satisfy செய்கிறதா என கண்டறிய every() function ஆனது பயன்படுகிறது.condition satisfy ஆகும் பட்சத்தில் true என return செய்யும், condition satisfy ஆகவில்லை என்றால் false என return செய்யும்.

array.every(callback(currentvalue,index,arr),thisArg)

Note: every() function-ல் ஒரு callback function argument ஆக அனுபப்படுகிறது. இங்கு array இல் உள்ள ஒவ்வொரு element-ம் குறிப்பிட்ட condition ஐ satisfy செய்கிறதா என கண்டறிய பயன்படுகிறது. இங்கு true அல்லது false என output கிடைக்கிறது.

Example1

<script>
var data=[10,20,30,40,50];  
 function check(value)  
  {  
    return value<60;    
  }  
document.writeln(data.every(check)); 
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற array variable இல் 10,20,30,40,50 என்ற values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data.every(check) function ஐ பயன்படுத்துகிறோம், check என்ற callback function argument ஆக அனுபப்படுகிறது. இந்த callback function இக்கு value,index,arr என்ற மூன்று argument கள் கிடைக்கும். இந்த function இல் முதல் argument ஆக கிடைக்கும் array இன் value ஐ வைத்து function இல் உள்ள condition செய்கிறதா என கண்டறிய every() function ஆனது பயன்படுகிறது.condition satisfy ஆகும் பட்சத்தில் true என return செய்யும், condition satisfy ஆகவில்லை என்றால் false என return செய்யும். இங்கு அனைத்து elements களும் condition satisfy செய்கிறது எனவே true என output கிடைக்கிறது.

Output:

true

Example2

<script>
var marks=[100,200,300,400];  
 function check(value)  
  {  
    return value<100;    
  }  
document.writeln(marks.every(check));
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு marks என்ற array variable இல் 100,200,300,400 என்ற values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு marks.every(check) function ஐ பயன்படுத்துகிறோம், check என்ற callback function argument ஆக அனுபப்படுகிறது. இந்த callback function இக்கு value,index,arr என்ற மூன்று argument கள் கிடைக்கும். இந்த function இல் முதல் argument ஆக கிடைக்கும் array இன் value ஐ வைத்து function இல் உள்ள condition செய்கிறதா என கண்டறிய every() function ஆனது பயன்படுகிறது. இங்கு array இல் உள்ள elements condition satisfy செய்யவில்லை எனவே false என output கிடைக்கிறது.

Output:

false

Comments