JavaScript Object.values()

Javascript இல் Object.values() method ஆனது நாம் input ஆக கொடுக்கும் ஒரு object இல் இருக்கும் values களை மட்டும் ஒரு array வாக எடுத்து நமக்கு output ஆக கொடுக்கிறது.

Object.values(obj)

Note: இங்கு Object.values() method இல் ஒரு object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இந்த function object ஐ எடுத்து object இல் உள்ள values களை array இல் output ஆக தருகிறது.

Example1

<script>
let data = {
    name: 'keyboard',
    price: 500
};
let res = Object.values(data);
document.writeln(res);  
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் object properties ஆனது assign செய்யப்பட்டுள்ளது. இங்கு Object.values(data) method இல் ஒரு object argument ஆக அனுபப்படுகிறது. இங்கு data object இல் உள்ள values கள் மட்டும் நமக்கு ஒரு array output ஆக கிடைக்கிறது. எனவே இங்கு output ["keyboard","500"] என கிடைக்கிறது.

Output:

keyboard,500

Example2

<script>
let animal = {
    name: 'tiger',
    weight: 160
};
let res = Object.values(animal);
document.writeln(res); 
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு animal என்ற variable இல் object properties ஆனது assign செய்யப்பட்டுள்ளது. இங்கு Object.values(animal) method இல் ஒரு object argument ஆக அனுபப்படுகிறது. இங்கு animal object இல் உள்ள values கள் மட்டும் நமக்கு ஒரு array output ஆக கிடைக்கிறது. எனவே இங்கு output ["tiger",160] என கிடைக்கிறது.

Output:

tiger,160

Comments