indexOf() Function in Javascript
indexOf() function இங்கு ஒரு குறிப்பிட்ட character அல்லது string இன் index position ஐ கண்டறிய பயன்படுகிறது. இந்த function case-sensitive முறையை பின்பற்றுகிறது. இங்கு index position ஆனது zero இல் இருந்து ஆரம்பமாகும். நாம் search செய்த string அல்லது character இங்கு இல்லை என்றால் output -1 என கிடைக்கும்.
indexOf(ch,index) - இங்கு நாம் search செய்ய வேண்டிய character மற்றும் அந்த string இல் எங்கிருந்து search ஆரம்பமாக வேண்டும் என்பதையும் argument ஆக அனுப்புகிறோம் அதற்கு ஏற்றவாறு position ஐ தருகிறது.
indexOf(str) - இங்கு நாம் கொடுக்கும் string இன் முதல் character க்கு இணையான index position ஐ தருகிறது.
indexOf(str,index) - இங்கு நாம் search செய்ய வேண்டிய string மற்றும் அந்த string இல் எங்கிருந்து search ஆரம்பமாக வேண்டும் என்பதையும் argument ஆக அனுப்புகிறோம் அதற்கு ஏற்றவாறு position ஐ தருகிறது.
Example1
<script>
var input = "PEACOCK";
var res = input.indexOf("A");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் "PEACOCK" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது.இங்கு input.indexOf("A") என்ற function பயன்படுத்தபடுகிறது, இங்கு indexOf() function இல் "A" என்ற character ஆனது argument ஆக அனுபப்படுகிறது. எனவே "A" என்ற character க்கு இணையான index position அதாவது 2 என output கிடைக்கிறது.
2
Example2
<script>
var data = "butterfly";
var res = data.indexOf("fly");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "butterfly" என்ற string value ஆனது store செய்யபட்டுள்ளது. இங்கு data.indexOf("fly") என்ற function பயன்படுத்தபடுகிறது,இங்கு indexOf() function இல் "fly" என்ற string ஆனது argument ஆக அனுபப்படுகிறது. எனவே "fly" என்ற string இல் f என்ற character க்கு இணையான index position அதாவது 6 என output கிடைக்கிறது.
6
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments