JavaScript Object.getOwnPropertySymbols() Method

Javascript இல் Object.getOwnPropertySymbols() method இங்கு ஒரு object இல் இருக்கும் symbol properties ஐ ஒரு array வாக நமக்கு தருகிறது. இங்கு symbol values ஆனது object இல் இல்லை என்றால் ஒரு empty array ஐ return செய்கிறது.

Object.getOwnPropertySymbols(obj)

Note: இங்கு Object.getOwnPropertySymbols() method இங்கு object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு குறிப்பிட்ட object இல் symbol properties இருந்தால் அந்த property ஐ நமக்கு ஒரு array வாக return செய்கிறது. symbol என்ற function மூலமாக symbol property ஐ assign செய்து கொள்ளலாம் symbol values ஆனது object இல் இல்லை என்றால் ஒரு empty array ஐ return செய்கிறது இங்கு output ஐ console இல் check செய்யவும்.

Example1

<script>
let channel = {
    sno:1
  }
  let channel_name = Symbol("name");
  channel[channel_name] = "Parallel Codes";
  console.log(Object.getOwnPropertySymbols(channel));
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.getOwnPropertySymbols method இல் channel object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு name என்ற symbol property ஆனது symbol function மூலம் assign செய்யப்பட்டு உள்ளது பிறகு இந்த symbol property channel என்ற object க்கு assign செய்யப்படுகிறது. எனவே Object.getOwnPropertySymbols() method நமக்கு channel object இன் உள்ளே இருக்கும் symbol property அதாவது name என்ற symbol ஐ ஒரு [Symbol(name)] array ஆக தருகிறது இங்கு output ஐ console இல் check செய்யவும்.

Output:

[Symbol(name)]

Example2

<script>
  let animal = {};
  let name1 = Symbol("lion");
  let name2 = Symbol("tiger");
  animal[name1] = "first";
  animal[name2] = "second";
  console.log(Object.getOwnPropertySymbols(animal));  
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.getOwnPropertySymbols method இல் animal object ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு lion மற்றும் tiger என்ற symbol property ஆனது symbol function மூலம் assign செய்யப்பட்டு உள்ளது பிறகு இந்த symbol property animal என்ற object க்கு assign செய்யப்படுகிறது. எனவே Object.getOwnPropertySymbols() method நமக்கு channel object இன் உள்ளே இருக்கும் symbol property அதாவது lion,tiger என்ற symbol ஐ [Symbol(lion), Symbol(tiger)] array ஆக தருகிறது.

Output:

[Symbol(lion), Symbol(tiger)]

Comments