JavaScript Object by object literal

Javascript இல் curly braces க்கு இடையில் property(key) colon value என்ற முறையை பயன்படுத்தி javascript இல் ஒரு object literal ஐ உருவாக்கலாம்.

object={property1:value1,property2:value2.....propertyN:valueN};

Note: இங்கு key மற்றும் value முறையை பயன்படுத்தி ஒரு object உருவாக்கபடுகிறது. javascript object இல் properties மற்றும் methods அமைந்திருக்கும். இங்கு properties மற்றும் values கள் comma seperator முறையில் பிரிக்கப்பட்டிருக்கும். இங்கு object இல் உள்ள values ஐ இரண்டு வழிகளில் access செய்யலாம் அவைகள் முறையே dot notation மற்றும் array access methods square bracket method.

Example

<script>

youtube_channel = {
        id: 1,
        name: "parallel codes",
        description: "Learn Programming in Tamil"
    }
    document.write(youtube_channel.id + "-" + youtube_channel.name + "-" + youtube_channel.description); 
}  
 
  
</script>

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் இங்கு youtube_channel என்ற ஒரு object literal create செய்யப்பட்டு, அதற்கு properties மற்றும் values கள் assign செய்யப்பட்டுள்ளது.இந்த object இல் properties மற்றும் values கள் comma seperator முறையில் பிரிக்கப்பட்டிருக்கும். இங்கு object இல் உள்ள values கள் dot notation முறையில் access செய்யபடுகிறது. youtube_channel.id என்பதற்கு object இல் உள்ள id value 1 என கிடைக்கிறது,youtube_channel.name என்பதற்கு object இல் உள்ள name value parallel codes என கிடைக்கிறது,youtube_channel.description என்பதற்கு object இல் உள்ள description value Learn Programming in Tamil என கிடைக்கிறது. இவ்வாறு dot notation முறையில் ஒரு object இல் உள்ள value ஐ access செய்து பயன்படுத்தலாம்.

Output:

1-parallel codes-Learn Programming in Tamil

Comments