fill() Function in Javascript
fill() function ஒரு array இல் உள்ள elements களை ஒரு குறிப்பிட்ட static values ஆல் நிரப்புவதற்கு பயன்படுகிறது. இந்த function ஆனது original array இல் மாற்றங்கள் செய்கிறது.
arr.fill(value[, start[, end]])
Example1
<script>
var data=["peacock","butterfly","parrot"];
data.fill("hen");
document.writeln(data);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற array variable இல் "peacock","butterfly","parrot" என்ற array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு data.fill("hen") function ஐ பயன்படுத்துகிறோம், எனவே data என்ற array இல் உள்ள அனைத்து element களுக்கும் "hen" என்ற string value ஐ fill function ஆனது நிரப்புகிறது. இந்த function original array இல் மாற்றத்தை செய்கிறது. இங்கு output hen,hen,hen என்ற புதிய array ஆக கிடைக்கிறது.
hen,hen,hen
Example2
<script>
var input=["hai","parallelcodes","youtube"];
input.fill("programming",2);
document.writeln(input);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற array variable இல் "hai","parallelcodes","youtube" என்ற array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு input.fill("programming",2) என்ற function ஐ பயன்படுத்துகிறோம், எனவே data என்ற array இல் உள்ள இரண்டாவது position இல் உள்ள element க்கு "programming" என்ற string value ஐ fill function ஆனது நிரப்புகிறது. இந்த function original array இல் மாற்றத்தை செய்கிறது. இங்கு output hai,parallelcodes,programming என்ற புதிய array ஆக கிடைக்கிறது.
hai,parallelcodes,programming
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments