Javascript Arrays
Array ஆனது Javascript இல் மிகவும் முக்கியமான concept ஆகும், அதேபோல் Javascript object மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு Javascript array ஐ பற்றி காண்போம்.
Array என்பது variable போல தான் இருக்கும், ஆனால் இதன் தனித்தன்மை என்னவென்றால் இங்கு array இல் ஒன்றிற்கு மேற்பட்ட values களை store செய்யமுடியும்.
Array ஒரேயொரு variable இல் ஒன்றிற்கு மேற்பட்ட values களை store செய்யமுடியும்.
Array இல் different datatypes கள் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட values களை store செய்யமுடியும். உதராணமாக String,Number,Boolean,Undefined,null,Object etc,.. போன்றவை.
இரண்டு வகையான syntax ஐ பயன்படுத்தி ஒரு empty array வை create செய்யலாம்.
var arr = new Array();
var arr = [];
Example
<script>
var number = [10,20,30,40,50];
console.log(number);
</script>
மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் number என்ற variable இல் [10,20,30,40,50] என்ற integer values கொண்ட array ஆனது உள்ளது. இந்த முறையை பயன்படுத்தி ஒரே array ஒன்றிற்கு மேற்பட்ட values களை store செய்து கொள்ளலாம். console.log இல் array variable ஐ argument ஆக அனுப்பும் போது array ஆனது console option அதாவது developer tools இல் output ஆக கிடைக்கும். output ஐ கவனிக்கவும்.
Array(5) 0: 10 1: 20 2: 30 3: 40 4: 50
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments