JavaScript Apply Function
Javascript Apply Function இங்கு ஒரு function இன் this context ஐ மாற்றுகிறது நாம் argument ஆக அனுப்பும் object ஐ current object ஆக எடுத்து கொண்டு அதற்கு ஏற்றவாறு function ஐ execute செய்கிறது.
function_name.apply($arguments);
Example1
<script>
function greet(greeting) {
return `${greeting}, I am ${this.name} and I am ${this.age} years old`;
}
const data = {
name: 'abc',
age: 24,
};
document.writeln(greet.apply(data, ['Hi']));
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு greet என்ற function current object இல் இருக்கும் name மற்றும் age என்ற key இன் value ஐ display செய்கிறது. apply method ஆனது object இன் this context ஐ மாற்றுகிறது. இங்கு data என்ற object க்கு name மற்றும் age என்ற key values கள் உள்ளன. இங்கு greet.apply(data, ['Hi']) என்ற முறையில் call செய்யும் போது greet function இன் this context இல் data என்ற object கிடைக்கிறது, எனவே இங்கு output "Hi, I am abc and I am 24 years old" என கிடைக்கிறது.
Hi, I am abc and I am 24 years old
Example2
<script>
function display(data) {
return `${data}, Please Visit ${this.name}`;
}
const channel = {
name: 'Parallel Codes'
};
document.writeln(display.apply(channel, ['Learn Programming In Tamil']));
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு display என்ற function current object இல் இருக்கும் name என்ற key இன் value ஐ display செய்கிறது. Apply method ஆனது object இன் this context ஐ மாற்றுகிறது. இங்கு channel என்ற object க்கு name: 'Parallel Codes' என்ற key values கள் உள்ளன. இங்கு display.apply(channel, ['Learn Programming In Tamil']) என்ற முறையில் call செய்யும் நமக்கு output ஆனது Learn Programming In Tamil, Please Visit Parallel Codes என கிடைக்கிறது.
Learn Programming In Tamil, Please Visit Parallel Codes
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments