from() Function in Javascript
from() function ஒரு புதிய array ஐ உருவாக்குகிறது, இது ஒரு array இன் shallow copy அல்லது iterable object ஆக இருக்கும். இங்கு ஒரு string ஐ argument ஆக அனுபினால் அதில் உள்ள அனைத்து character களும் ஒரு புதிய array இல் store ஆகிவிடும்.
Array.from(object,map_fun,thisArg)
Example1
<script>
var data = "parallelcodes";
var res = Array.from(data);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "parallelcodes" என்ற string value save செய்யபட்டுள்ளது. இங்கு Array.from(data) function ஐ பயன்படுத்துகிறோம், எனவே data என்ற string இல் உள்ள character ஆனது res என்ற variable இல் ஒரு புதிய array ஆக save ஆகிறது.
p,a,r,a,l,l,e,l,c,o,d,e,s
Example2
<script>
var birds = ["peacock","parrot","butterfly","peacock"];
var res = Array.from(new Set(birds));
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு birds என்ற array variable இல் "peacock","parrot","butterfly","peacock" என்ற array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு Array.from(new Set(birds)) என்ற function ஐ பயன்படுத்துகிறோம், இங்கு Set என்ற class க்கு argument ஆக நாம் array ஐ அனுப்புகிறோம் இந்த function array இல் உள்ள duplicate values ஐ remove செய்து ஒரு object ஐ நமக்கு கொடுக்கிறது, இந்த object ஐ Array.from() function ஒரு array values ஆக நமக்கு கொடுக்கிறது output ஐ கவனிக்கவும். இங்கு "peacock" என்ற string ஒரு முறை மட்டுமே வந்துள்ளது.
peacock,parrot,butterfly
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments