JavaScript events

Javascript இல் ஒரு event என்பது ஒரு action ஆகும். இது web browser இல் உருவாகிறது.

உதராணமாக user website இல் ஒரு button ஐ click செய்யும் போது இங்கு click event ஐ கொடுத்திருந்தால் இங்கு click event ஆனது உருவாகிறது. அதேபோல் alert என்ற function click event இன் மூலமாக call செய்யலாம்.

இங்கு முக்கியமாக event முறையானது நாம் events trigger ஆகும் போது ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு பயன்படுகிறது.உதராணமாக இங்கு ஒரு button க்கு click event மற்றும் function கொடுகப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். இங்கு button click செய்யும் போது function ஆனது call ஆகிறது.

Javascript இல் ஒவ்வொரு event ம் event handler ஐ கொண்டிருக்கும். இது ஒரு block of code ஆக அமையும். இங்கு event occur ஆகும் போது code ஆனது execute ஆகிறது.

Javascript இல் event handler ஆனது event listener எனவும் அழைகப்படுகிறது. இந்த event listener ஆனது ஒரு event occur ஆகிறத என்பதை கண்டறிந்து அந்த event இல் இருக்கும் code களை execute செய்கிறது.

Example


<button id="btn">Click Me!</button>
<script>
let btn = document.querySelector('#btn');

function display() {
    document.writeln('It was clicked!');
}

btn.addEventListener('click',display);
</script>

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் இங்கு html tag கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு document.querySelector('#btn') என்ற method மூலமாக ஒரு button element ஐ select செய்து கொள்கிறோம். அதேபோல் btn.addEventListener('click',display) இங்கு addEventListener என்ற function இல் click event மற்றும் display என்ற callback function ஐ argument ஆக கொடுக்கிறோம். எனவே நாம் button ஐ click செய்யும் போது display என்ற callback function ஆனது execute ஆகிறது. இங்கு நமக்கு output It was clicked! என கிடைக்கிறது.

Output:

It was clicked!

Comments