Basics Of Javascript

இந்த javascript basics பகுதியில் javascript variables பற்றி பார்க்கலாம், javascript இல் ஒரு variable ஐ எவ்வாறு declare செய்வது, variables இன் வகைகள் என்ன, declare செய்வதற்கான rules ஆகியவற்றை காணலாம்.

Javascript variables

Variables என்பது ஒரு data வை store செய்வதற்கான இடமாகும், நாம் variable இல் குறிப்பிட்ட value ஐ store செய்து பின்னர் மாற்றிகொள்ளலாம்.

Variables இல் 8 வகையான datatypes கள் இருக்கும் அவையாவன,

String

Number

Bigint

Boolean

Undefined

Null

Symbol

Object

var keyword ஆனது ஒரு variable ஐ declare செய்வதற்கு பயன்படுத்துகிறோம்.

var a = 100; இங்கு a என்ற variable இல் 100 என்ற integer value ஆனது store செய்யபட்டிருக்கும். நமக்கு வேண்டுமென்றல் a value ஐ பின்னர் மாற்றிகொள்ளலாம்.

var b = "welcome"; இங்கு "welcome" என்ற string ஆனது b என்ற variable இல் store செய்யபட்டுள்ளது.

var c = true; இங்கு true என்ற boolean value ஆனது c என்ற variable இல் store செய்யபட்டுள்ளது. எனவே நாம் Boolean value ஐ javascript இல் store செய்துகொள்ளலாம்.

Example1

<script>
var a = 100;
console.log(a);
var b = "welcome";
console.log(b);
var c = true;
console.log(c);
</script>

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் console.log() function இங்கு print ஆக கூடிய statement ஆனது output ஆக கிடைக்கும். இங்கு 100 என்ற integer மற்றும் welcome என்ற string மற்றும் true என்ற Boolean value ஆனது console option அதாவது developer tools இல் output ஆக கிடைக்கும்.

Output:

100

welcome 

true

Comments