What is Function?
ஒரு வேலையை மிக சுலபமாக செய்ய, ஏதேனும் ஒரு name-ஐ வைத்து எழுதபடகூடிய ஒரு set of code தான் function. இதை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திகொள்ளலாம்.
இரண்டு வகையான functions உள்ளது
- Build-In Function
- User Defined Function
Build-In Function
ஒரு வேலையை மிக சுலபமாக செய்ய ஏற்கனவே எழுதபட்டிருக்ககூடிய ஒரு set of Standard liberary functions தான் Build-In Function என்று அழைக்கபடுகிறது. example printf(), scanf(), string functions, mathematical functions,...,etc,. இந்த functions name-ஐ நம் விருபதிற்கு ஏற்றார்போல் மாற்றிகொள்ள முடியாது.
User Defined Function
நாம் செய்ய விரும்பிய ஒரு வேலையை, சுலபமாக செய்ய, நாமே எழுதகூடிய ஒரு set of instruction(coding). இதில் functions name-ஐ நமது விருப்பம்போல் மாற்றிகொள்ளலாம். இதில் return value மற்றும் return data-type மிக முக்கியமானவை
Syntax
return_datatype function_name (datatype argument1,datatype argument2,..etc)
{
executable statement;
........
........
........
return result_value;
}
//example 1
int find_sum(int a,int b,int c){
int x; // local variable declaration;
x=a+b+c;
return x;
}
//example 2
void find_multiple(int a,float b){
float x; // local variable declaration;
x=a*b;
printf("Multiplication value is %f",x);
}
ஒரு functions-ல் உள்ள coding முழுவதும் execute ஆன பிறகு, ஒரு value நமக்கு result ஆக கிடைக்கும். இந்த result-க்கு பெயர் தான் return value. இந்த value எந்த type-ல் நமக்கு return ஆகவேண்டும் என்பதை குறிப்பிடுவதே return data-type என்று அழைக்கபடுகிறது.
List of Return Data-type
- void
- int
- float
- double
- char
return
என்ற keyword நிச்சயம் பயன்படுத்த வேண்டும். ஆனால் void என்ற return data-type-ஐ பயன்படுத்தினால் மட்டும் return
என்ற keyword-ஐ பயன்படுத்த கூடாது. ஏனெனில் void என்றால் return nothing என்பது பொருள்.
What is Parameter?
ஒரு function-லிருந்து மற்றொரு function-க்கு values-ஐ transfer செய்ய பயன்படுத்துகின்ற variables தான் parameters என்று அழைக்கபடுகிறது.
What is Argument?
Parameters-ல் அனுப்பகூடிய ஒவொரு values-ம் argument என்று அழைக்கபடுகிறது.
What is Calling Function
ஒரு function-லிருந்து மற்றொரு function-ஐ parameters பயன்படுத்தியோ அல்லது பயன்படுதாமலோ அழைப்பது calling function எனப்படும். இது இரண்டு வகைகளில் call செய்யபடுகிறது.
- Call by value - parameter-ல் values-ஐ அனுப்பி call செய்யபட்டால் call by value.
- Call by reference - parameter-ல் values-க்கு பதிலாக argument-ன் address-ஐ அனுப்பி call செய்யபட்டால் call by reference.
Syntax for Calling function
// function call with parameter
function1(parameter1,parameter2);
//function call without parameter
function2();
// Example
void main(){
// calling function without parameter
sum();
// calling function with parameter
find_interest(2.4);
}
// called function
void sum(){
sum calculations;
....
....
}
// called function
float find_interest(float percent){
Interest calculations;
.....
.....
return interest;
}
Categories of Functions
- No Argument No Return Value
- No Argument With Return Value
- With Argument With Return Value
- With Argument No Return Value
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments