Printf and Scanf

இவை இரண்டும் in-built library functions. scanf-என்பது input values-ஐ enter செய்வதற்கும், printf என்பது நமக்கு வேண்டிய output value-ஐ screen-ல் print செய்வதர்க்க்காகவும் பயன்படுத்தபடுகிறது. printf,scanf-ல் உள்ள f-என்பது formatted-ஐ குறிக்கும், ஆகவே scanf-என்பது formatted input from standard input (keyboard), printf-என்பது sends formatted output to the standard output (screen).

Rules for using printf

  • printf-என்ற function name எப்போதும் lowercase-ல் மட்டுமே இருக்கவேண்டும். இதன் இறுதியில் semicolon(;) நிச்சியம் இடம்பெற்றிருக்கவேண்டும். example printf(); is valid. Printf(); PRINTF(); are invalid..
  • ஒரு string-ஐ மட்டும் print செய்யவேண்டுமெனில் அதை double quotes-க்குள் கொடுக்கவேண்டும். example printf("your message..");

print the single value in printf

ஒரு value-ஐ print செய்ய வேண்டுமெனில் அது எந்த variable-லில் உள்ள value என்பதையும் அது எவ்வகையான data type என்பதை கண்டறிந்து அதற்க்கான format specfier-ஐயும் variable-ஐயும் பயன்படுத்தவேண்டும். Example ஒரு integer value print செய்ய printf("%d",a); இதில் "%d" என்பது integer-க்கான format specifier, a என்பது variable.

print the multiple values in printf

ஒன்றுக்கு மேற்பட்ட values-ஐ print செய்ய வேண்டுமெனில் அது எந்த variables-லில் உள்ள value என்பதையும் அது எவ்வகையான data type என்பதை கண்டறிந்து அதற்க்கான format specfier-ஐயும் variables-ஐயும் பயன்படுத்தவேண்டும்.

Example

printf("%d %f %s",count,price,name);

"%d" என்பது integer-க்கான format specifier.
"%f" என்பது float-க்கான format specifier
"%s" என்பது string-க்கான format specifier

Note: format specifier-ஐ எந்த order-ல் கொடுகின்றோமோ அதே order-ல் variables-ஐயும் கொடுக்கவேண்டும்.

Rules for using scanf

  • scanf-என்ற function name எப்போதும் lowercase-ல் மட்டுமே இருக்கவேண்டும். இதன் இறுதியில் semicolon(;) நிச்சியம் இடம்பெற்றிருக்கவேண்டும். example scanf(); is valid. Scanf(); SCANF(); are invalid..
  • எவ்வகையான values-ஐ input-ஆகா கொடுகின்றோமோ அதற்க்கான format specfier-ஐம் variable-ஐயும் பயன்படுத்தவேண்டும்.

Read single input value in scanf

scanf("%d",&count); 

"%d" என்பது integer-க்கான format specifier.
"&" என்பது address of the variable. அதாவது கொடுக்ககூடிய input எந்த address-ல் store ஆகவேண்டும் என்பதற்காக குரிபிடபடுகிறது
"count" என்பது variable

Read multiple input value in scanf

scanf("%d %f",&count,&price); 

"%d" format specfier-ஆனது count என்ற variable-க்கும் "%f" format specfier-ஆனது price என்ற variable-க்கும் எடுத்துகொள்கிறது

Note: scanf-ல் variable உடன் ampersand(&) நிச்சியம் இடம் பெற்றிருக்கவேண்டும்.

Comments