Register variable

register variable மற்ற variable-ஐ விட மிக வேகமாக செயல்படகூடியது.

ஒரு register variable கீழ்க்கண்ட பண்புகளை அடிப்படையாக கொண்டது.

Keyword: register என்ற keyword பயன்படுத்தலாம். Example register int a;

Declaration: register variable function-க்கு உள்ளே declare செய்துகொள்ளலாம்.

Storage Area: register variable-ன் values, CPU-register memory-ல் store செய்யபடுகின்றது.

Default Value: register variable-க்கு value கொடுக்கவில்லை எனில், அது garbage value-ஐ எடுத்துகொள்ளும்

Lifetime: ஒரு function-க்கு உள்ளே மட்டும் தான் தனது அதிகாரத்தை செலுத்தும். function-க்கு வெளியே அதன் அதிகாரத்தை இழந்துவிடுகிறது.

Example

#include<stdio.h>
#include<conio.h>
int main(){
	register int x;
	printf("\n The value is %d",x);

	return 0;
}



மேலே கொடுக்கபட்டுள்ள example-லில் register variable-க்கு எந்த value-ம் கொடுக்கப்படவில்லை ஆகையால் அது garbage value-வை print செய்கிறது. garbage value ஒவ்வொரு system-க்கும் வேறுபடும்.

Output:

-984

Comments