What is String?

String என்பது group of characters or array of characters. அதாவது பல characters ஒன்று சேர்ந்த தொகுப்பே string எனப்படும். Examole "welcome", "Shoping mall", "Jewells", etc,. C Program-ல் string எப்போதும் NULL என்ற character-ஐ கொண்டு முடியும். NULL என்ற character, '\0' என்று வரையறுக்கபட்டுள்ளது.

Note:
1. String என்பது double quotes " "-க்குள் கொடுக்கபடுகின்றது. example "Never Make a Promise When You are Happy". String-ல் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட characters இருக்கலாம்.
2. Character என்பது single quotes ' '-க்குள் கொடுக்கபடுகின்றது. example 'A','t','6',' ', etc,. Character-ல் ஒரே ஒரு character மட்டுமே இருக்க வேண்டும்.

String datatype

C program-ல் float, int போன்று String-க்கு என்று தனி datatype கிடையாது. இதற்க்கு char datatype பயன்படுத்தபடுகிறது.

Different Ways of String Initialization

char []="C program";
char [30] = "C Program";
char []= {'C',' ','P','r','o','g','r','a','m'};
char [30] = {'C',' ','P','r','o','g','r','a','m'};

Simple Example for Print string

#include<stdio.h>
#include<conio.h>

int main(){

// declare and initialize string 
char name[]= "Narayanamoorthi";

// print string 
printf("%s",name);

return 0;
}

Output:

Narayanamoorthi

Why we have not used the '&' sign with variable in scanf statement?

ஒவ்வொரு variable-ன் value-வையும் input-ஆகா scanf-ல் கொடுக்கும்போதும் '&' பயன்படுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில் இது value-வை memory-ல் store செய்வதற்கான address-ஐ வழங்குகிறது. ஆனால் இங்கு string என்பது ஒரு character array ஆகையால் braces '[]'-ஐ நீக்கிவிட்டு variable-ஐ மட்டும் பயன்படுத்தினாலே போதும் அது string-ன் base address-ஐ கொடுத்து விடுகின்றது. ஆகையால் தான் '&' பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Example

#include<stdio.h>
#include<conio.h>

int main() 
{    
    // declaring string 
    char str[50];
	
    printf("Enter a string: "); 
	
    // reading string 
    scanf("%s",str); 
      
    // print string 
    printf("%s",str); 
  
    return 0; 
} 

Output:

Enter a string: Welcome to new Way of learning
Welcome to new Way of learning

String Functions

String-ஐ எளிமையாக கையாளுவதர்க்கு சில inbuild function-கள் உள்ளன. அவை பின்வருமாறு

  1. strcpy() - string copy
  2. strcat() - string concatenation
  3. strlen() - string length
  4. strupr() - string uppercase
  5. strlwr() - string lowercase
  6. strcmp() - string comparison
  7. strcmpi() - string comparison ignore case
  8. strrev() - string reverse
Note: மேற்கண்ட அனைத்து string function-களையும் பயன்படுத்த #include<string.h> என்ற header file-ஐ பயன்படுத்த வேண்டும்.

Comments