Local variable

ஒரு variable-ஐ function-க்கு உள்ளே declare செய்யபட்டிருந்தால், அவை local variable என்று அழைக்கபடுகிறது. ஒரு local variable கீழ்க்கண்ட பண்புகளை அடிப்படையாக கொண்டது.

Keyword: local variable-க்கு auto என்ற keyword பயன்படுத்தலாம். Example auto int a; அல்லது int a;

Declaration: local variable எப்பொழுதும் function-க்கு உள்ளே தான் declare செய்யவேண்டும்.

Storage Area: local variable-ன் values, stack memory-ல் store செய்யபடுகின்றது.

Default Value: local variable-க்கு value கொடுக்கவில்லை எனில், அது garbage value எடுத்துகொள்ளும்

Lifetime: local variable ஒரு function-க்கு உள்ளே மட்டும் தான் தனது அதிகாரத்தை செலுத்தும். function-க்கு வெளியே அதன் அதிகாரத்தை இழந்துவிடுகிறது. அதாவது variable-ன் values function-க்கு உள்ளே மட்டும் தான் வேலை செய்யும் ஆனால் வெளியே work ஆகாது.

Note: local variable-ஐ function-க்கு உள்ளே தான் declare செய்யவும் முடியும்., பயன்படுத்தவும் முடியும்.

Example

#include<stdio.h>
#include<conio.h>
void function1();
void function2();

int main(){
	int m=10; // local variable
	function2();
	printf("%d\n",m);
	return 0;
}

void function1(){
	int m=10; // local variable
	printf("%d\n",m);
}

void function2(){
	int m=100; // local variable
	function1();
	printf("%d\n",m);
}

மேலே கொடுக்கபட்டுள்ள example-லில் முதலில் main function-னில் m=10 என்று எடுத்துகொள்கிறது. இந்த m value print செய்வதற்கு முன்பாக function2-க்கு சென்றுவிடுகிறது. அங்கே m=100 என்று எடுத்துகொள்கிறது இந்த m value print செய்வதற்கு முன்பாக function1-க்கு சென்றுவிடுகிறது. அங்கே m=10 என்று எடுத்துகொள்கிறது.

இங்கிருந்து வேறு எந்த function-ம் call செய்யப்படவில்லை என்பதால் இந்த m value தான் முதலில் print ஆகும். அடுத்து function2-க்கு சென்று அங்குள்ள m=100 value-ஐ தான் print செய்யும் . அடுத்து main function-க்கு சென்று அங்குள்ள m=10 value-ஐ தான் print செய்யும். ஒரு function-னில் உள்ள m-ன் value மற்றொரு function-னில் எடுத்துகொள்ளாமல் அந்த function-க்கு வரும்போது மட்டும் அந்த variable வேலை செய்கின்றது. இதுவே local variable.

Output:

10
100
10

Comments