Inheritance in C++

ஒரு class மற்றொரு class-ல் உள்ள அனைத்து பண்புகளைகளையும்(properties) பெற்றுகொள்வது Inheritance என அழைக்கப்படுகிறது. இது OOP's-ன் மிக முக்கியமான சிறப்பு அம்சமாக உள்ளது.

இதில் Sub Class மற்றும் Super Class என்று இரண்டு விதமாக பிரிக்கபடுகிறது.

Sub Class: அனைத்து பண்புகளையும்(properties) மற்றொரு class இடமிருந்து பெற்றுகொள்வது .

Super Class: தன்னுடைய பண்புகள்(properties) அனைத்தையும் மற்றொரு class-க்கு கொடுப்பது .

Why and When use Inheritance?.

இப்பொழுது Bus, Car and Truck ஆகிய மூன்று தனி தனி class உருவாக்கிகொள்வோம். இதில் அனைத்து class-களுக்கும் fuelAmount(), capacity(), applyBrakes() இந்த பண்புகள் அனைத்ததும் ஒரேமாதிரிதான் இருக்கும். இபொழுது inheritance பயன்படுத்தாமல் class-ஐ create செய்தால் இந்த பண்புகளை ஒவொரு class-க்கும் தனி தனியே கொடுக்க வேண்டும்.

https://linto.in/images/cpp/inheritance.png

இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க vehicle என்ற class-ஐ உருவாக்கி அவற்றிலிருந்து inheritance-ஐ பயன்படுத்தினால், ஒருமுறை மட்டும் கொடுத்தால் மட்டும் போதும். அவற்றை அனைத்து class களும் பயன்படுத்திகொள்ளலாம்.

https://linto.in/images/cpp/inheritance2.png

Syntax:

class sub_class_name : access_mode super_class_name
{
  //program logics of sub class
};

Types of Inheritance

  1. Single Inheritance
  2. Multiple Inheritance
  3. Multilevel Inheritance
  4. Hierarchical Inheritance
  5. Hybrid (Virtual) Inheritance

Comments

Riza 16th April,2024 08:09 pm
It is very useful toy studies