Abstraction in C++
Abstraction என்பது மிகவும் அத்தியாவசியமான(essential) data-வை மட்டும் காட்டும். தேவையற்ற தகவல்களை மறைத்துவிடும். Data Abstraction என்பது வெளிப்புற உலகிற்கு data-வை பற்றிய அத்தியாவசிய தகவலை மட்டுமே வழங்கும், அதன் பின்புல விவரங்களையும், அது எவ்வாறு செயல்படுகிறது என்ற செயல்பாடுகளையும் மறைத்து வைத்துகொள்கிறது. இதுவே data abstraction.
Abstraction using access specifiers
- ஒரு class members-ஐ public-ஆக declare செய்தால் அதை அந்த program-ல் எங்கிருந்து வேண்டுமானாலும் access செய்துகொள்ளலாம்.
- ஒரு class members-ஐ private-ஆக declare செய்தால் அதை அந்த class-ன் உள்ளிருந்து மட்டுமே access செய்துகொள்ள முடியும். class-க்கு வெளியில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் அதை அணுகுவதற்கு(access) அனுமதி இல்லை.
#include <iostream>
using namespace std;
class implementAbstraction{
private:
int a, b;
public:
// method to set values of private members
void set(int x, int y){
a = x;
b = y;
}
void display(){
cout<<"a = " <<a << endl;
cout<<"b = " << b << endl;
}
};
int main(){
implementAbstraction obj;
obj.set(10, 20);
obj.display();
return 0;
}
Output:
a=10b=20
மேலே உள்ள program-ல் a and b ஆகிய இரண்டு variable-களையும் நம்மால் நேரடியாக அணுக(access) முடியாது. இருப்பினும் set() என்ற function-ஐ call செய்து தான் a மற்றும் b-ன் value-களை set செய்ய இயலும். அதேபோல் display() என்ற function-ஐ call செய்து தான் a மற்றும் b-ன் value-களை print செய்ய இயலும். இதுவே data abstraction.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments