Qn: Write a simple java program for "Fibonacci" series up to a given number.
-By Priscilla, Last Update On 23rd April,2019 06:37 am

Definition for Fibonacci Series

0,1 இவற்றிலிருந்து ஆரம்பித்து அடுத்தடுத்து வரக்கூடிய ஒவ்வொரு எண்ணும், அதற்க்கு முன்பு உள்ள இரண்டு எண்களை கூட்டுவதால்(sum) வரகூடியதாகும். eg: 0,1,1,2,3,5,8,13,...upto given number

Explanation

  1. முதலில் 0,1 என்ற values-ஐ f1=0,f2=0 என்று எடுத்துகொள்ளவேண்டும்.
  2. அடுத்தபடியாக loop-ஐ set செய்யவேண்டும். ஏனெனில் number of terms n-ஐ பொருத்து தான் அமையும். இது 3-லிருந்து தொடங்கி n-ல் முடிந்தால் போதும். ஏனெனில் ஏற்கனவே 0,1 என்ற இரண்டு terms நம்மிடம் உள்ளது.
  3. இதில் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு எண்ணும் அதற்க்கு முன்பு உள்ள இரண்டு எண்களை கூட்டுவதால்(sum) வரகூடியதாகும். ஆகையால் f1 மற்றும் f2-வை sum செய்து ஒரு புதிய variable "fibno_series"-ல் assign செய்யபடுகிறது. அதற்க்கு பின் print செய்யவேண்டும்
  4. அதன் பின் f2-ன் value-ஐ f1-க்கும், fibno_series-ன் value-ஐ f2-க்கும் மற்றிவிடவேண்டும். ஏனெனில் இதற்க்கு முன்பு உள்ள values-ஐ அடுத்தடுத்து தானாகவே மாற்றிக்கொள்ளும்.
import java.util.Scanner;
    public class FibonacciSeries{

    public static void main(String args[]) {
    
        Scanner sn = new Scanner(System . in);
        System . out . print("Enter how many terms you want to print: ");
        int n = sn . nextInt();
        int f1 = 0, f2 = 1;
        
        System . out . println("Fibonacci Series is up to " + n + " terms:\n");
        System . out . print(f1 + "," + f2 + ",");
        
        for(int i = 3;i<= n;i++) {
            int fibno_series = f1 + f2;
            System . out . print(fibno_series + ",");
            f1 = f2;
            f2 = fibno_series;
        }
    }
}
Output:
Enter how many terms you want to print: 10
Fibonacci Series is up to 10 terms:
0,1,1,2,3,5,8,13,21,34

Pgcomments

Comments